சென்னை: உத்தரப்பிரதேச செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுண்டர்

58பார்த்தது
சென்னையில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உத்தரப்பிரதேச செயின் பறிப்பு கொள்ளையன் கொல்லப்பட்டார்.  இது குறித்த பரபரப்பு பின்னணி தகவல் வெளியானது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் ஆறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச கொள்ளையன் நள்ளிரவில் காவல்துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்தவரின் பெயர் ஜாபர் குலாம் ஹூசைன் என்பதும் இவர் மீது பல்வேறு மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பதும் காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு தாம்பரத்தில் நடத்த செயின் பறிப்பு சம்பவங்களிலும் இந்த கொள்ளையனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி