செல்போனை போலீஸாரிடம் ஒப்படைத்த டிடிஎஃப் வாசன்

50பார்த்தது
செல்போனை போலீஸாரிடம் ஒப்படைத்த டிடிஎஃப் வாசன்
மதுரையில் கைது செய்யப்பட்ட பைக் ரேசர் டிடிஎஃப் வாசன், காவல் துறை உத்தரவுக்கிணங்க தனது செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை இன்று போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் சென்ற பைக் ரேசர் டிடிஎஃப் வாசன், வண்டியூர் டோல்கேட் அருகே செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக கார் ஒட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாசனை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர் மன்னிப்புக் கோரியதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, நீதிமன்ற நிபந்தனைபடி, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்திட்டு வருகிறார் வாசன். இருப்பினும், விசாரணைக்காக, அவரது செல்போன் மற்றும் எல்எல்ஆர் உள்ளிட்ட ஆவணங்களை 3 நாட்களுக்குள் ஒப்படைக்க அண்ணாநகர் போலீஸார் வாசனுக்கு சம்மன் வழங்கினர். ஆனால், அவற்றை வழங்காமல் தாமதித்து வந்த அவர், புதன்கிழமை தனது செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை போலீஸாரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக போலீஸார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி