நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சனை: தயாநிதிமாறன்

80பார்த்தது
மத்திய பட்ஜெட்டில், இந்தி பேசாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சித்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து திமுகவின் சென்னை கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மாவட்டங்கள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய தயாநிதிமாறன், தமிழர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை, தமிழும் இல்லை, தமிழகத்துக்கு நிதியும் இல்லை. தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்ததை தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள். தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி