தன்னை வேதாளம் என விமர்சித்த ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி

66பார்த்தது
தமிழ்நாட்டில் பல பேய்கள் இருக்கு, அதை ஓட்ட தான் நான் வந்துருக்கேன் என்று தன்னை வேதாளம் என விமர்சித்த ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மேல் ஏறிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் பல பேய்கள் இருக்கின்றன. இந்த வேதாளம் வந்திருப்பது பேய்களை ஓட்டுவதற்கு தான். ஒவ்வொரு பேயாக ஓட்டிவருகிறேன். தற்போது இந்த பேயை ஓட்டிவிட்டு அடுத்த அந்தப் பேயை ஓட்ட வருகிறேன்.

தமிழக மக்களை பிடித்த பீடைகளைப் போல இந்த பேய்கள் உள்ளன. 70 ஆண்டுகளாக வளர்ச்சி இல்லாமல் இருப்பதற்கு இவர்கள் தான் காரணம் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி