எழும்பூர் - Egmore

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் விளக்கம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாவது குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும். புயலைப் பொருத்தவரை, கடலின் வெப்பநிலை, கீழ்ப்பகுதியில் உள்ள காற்று, மேல்பகுதியில் காற்று விரிவடையும் தன்மை, மத்திய பகுதியில் ஈரப்பதம் செல்வது மற்ற நிகழ்வுகள் இவையெல்லாம் சேர்ந்துதான் முடிவு செய்யப்படும். எனவே, தற்போது நிலவும் இந்த நிலை தொடரும்போது, அடுத்த வரும் 5 தினங்களுக்கு குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் நல்ல மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காலை நிலவரப்படி, நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 880 கி. மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் 4 தினங்களுக்கு வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாவது குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

வீடியோஸ்


சென்னை
சென்னை: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Nov 25, 2024, 17:11 IST/

சென்னை: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Nov 25, 2024, 17:11 IST
கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று(நவ.25) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  அதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது, இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே, நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே, புதுவையிலிருந்து தென்கிழக்கே சென்னையிலிருந்து தென்கிழக்கே 940 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருப்பதாகவும், அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.