சென்னை-கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள்: விரைவில் அறிவிப்பு
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல காலம் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, நாளை மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நவ. 19-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.20 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06111) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு கொல்லத்தை அடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து நவ. 20-ம் தேதி முதல் ஜன. 15-ம் தேதி வரை புதன்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06112) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இருமார்க்கமாகவும் தலா 9 சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு உள்பட பல்வேறு நிலையங்களில் நின்று செல்லும். இந்த 3 சிறப்பு ரயில்களும் இருமார்க்கமாக, தலா 9 சேவைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு ரயில்வே தரப்பில் இருந்து விரைவில் வெளியாக உள்ளது.