சென்னை திருவொற்றியூர் மண்டலம் 1க்குட்பட்ட எம்ஆர்எஃப் சக்திபுரம் பகுதியில் உள்ள 2 பூங்காக்களை மேம்படுத்தும் பணியை எம். பி. மேம்பாட்டு நிதி ரூபாய் 50 லட்சம் மதிப்பில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி பூமி பூஜை போட்டு துவங்கி வைத்தார்.
மேலும், பூங்காவில் உள்ள சிறிய நூலகத்தையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.