பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தோர் பட்டியலிட்டு விஜய் நன்றி

83பார்த்தது
தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி முதல்வர் என்‌. ரங்கசாமி, முன்னாள்‌ முதல்வரும், எதிர்க்கட்சித்‌ தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள்‌ முதல்வர் ஒ. பன்னீர்செல்வம்‌, தெலங்கானா மற்றும்‌ புதுச்சேரியின்‌ முன்னாள்‌ ஆளுநர்‌ தமிழிசை செளந்தரராஜன்‌, நாம்‌ தமிழர்‌ கட்சித்‌ தலைமை ஒருங்கிணைப்பாளர்‌‌ சீமான்‌, விசிக தலைவர்‌ திருமாவளவன்‌, பாட்டாளி மக்கள்‌ கட்சி தலைவர்‌ அன்புமணி ராமதாஸ்‌, அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழக பொதுச்‌செயலாளர்‌ டி. டி. வி. தினகரன்‌, மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி தலைவர்‌ கமல்ஹாசன்‌, தமிழக மக்கள்‌ முன்னேற்ற கழக தலைவர்‌ ஜான்‌ பாண்டியன்‌, எஸ்‌. டி. பி. ஐ. கட்சி தலைவர்‌ நெல்லை முபாரக்‌, சட்டமன்ற உறுப்பினரும்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவருமான செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர்‌ அண்ணாமலை மற்றும்‌ என்‌ நெஞ்சில்‌ குடியிருக்கும்‌ கட்சித்‌ தோழர்கள்‌, உலகெங்கும்‌ உள்ள என்‌ உயிரினும்‌ மேலான கோடானு கோடி சொந்தங்கள்‌, பொதுமக்கள்‌ என அனைவருக்கும்‌ எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்‌ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி