சென்னை ஃப்ரம் தி ஜன்னல் சீட்’ என்ற தலைப்பில் மாநகர பேருந்து பயணிகளுக்கான புகைப்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘சென்னை ஃப்ரம் தி ஜன்னல் சீட்’ என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் புகைப்பட போட்டியில் பங்கேற்க சென்னை மக்கள் அனைவரையும் அழைக்கிறோம். மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் போது மக்களின் வாழ்க்கை முறை, மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களின் அர்பணிப்பு, சென்னையின் அழகு போன்றவற்றை காட்சிப்படுத்த வேண்டும்.
அப்படி எடுக்கப்படும் புகைப்படத்தை பற்றி 50 வார்த்தைகளுக்கு மிகாமல் குறிப்பிட வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தை, https: //t. co/PtW2XiFmuf என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 15-க்குள் பதிவேற்றி, சுய விவரங்களை குறிப்பிட வேண்டும். அல்லது mtcpolaamright@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகைப்படத்தை சமர்ப்பிக்கலாம். புகைப்படத்தை சமூக ஊடகத்திலும் பதிவேற்றி, mtcchennai டேக் செய்து, #polaamright என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்த வேண்டும்.