ராதாகிருஷ்ணன் நகர் - Dr radhakrishnan nagar

சென்னை: சுரங்கப்பாதை கட்டுமான பணி: போக்குவரத்து மாற்றம்

சென்னை: சுரங்கப்பாதை கட்டுமான பணி: போக்குவரத்து மாற்றம்

சென்னையில் கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பதை பகுதியில் மேம்பால கட்டுமானப் பணிகள் அனைத்தும் நடைபெற இருப்பதால் நவம்பர் 6-ந் தேதி அதாவது நாளை முதல் ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை உள்ள சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் மேம்பாலம் கட்டும் பணியினை கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேற்கொள்ள இருப்பதால் இந்த பணியின் காரணமாக பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு நாளை முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட இருக்கின்றன. கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்படும் தற்போதுள்ள ஒரு வழி போக்குவரத்தும், இதனையடுத்து பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகளும் நடைமுறைப்படுத்தப்படும். ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்படும். புளியந்தோப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்டீபன்சன் சாலை வழியாக செல்லும் அதேபோல் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்டீபன்சன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

சென்னை
Nov 05, 2024, 14:11 IST/எழும்பூர்
எழும்பூர்

நவ. 7 முதல் 3 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

Nov 05, 2024, 14:11 IST
தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நவ. 6ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ. 7ம் தேதி, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நன்றி ஏஎன்ஐ