ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு

55பார்த்தது
ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு
திருமங்கலம் - முகப்பேர் பகுதியில், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்படும் கடைகளால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சென்னை, அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், திருமங்கலம் - முகப்பேர் சாலை உள்ளது. இந்த சாலையில் திருமங்கலத்தில் இருந்து முகப்பேர், நொளம்பூர், அம்பத்துார் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல முடியும். அதேபோல், அம்பத்துாரில் இருந்து வருவோரும், திருமங்கலம் வழியாக அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கின்றனர்.

சாலையோர ஆக்கிரமிப்பால் பஜாரில் போக்குவரத்து நெரிசல் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில், இருபுறங்களிலும் சாலையை ஆக்கிரமித்து காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை கடைகள் அமைக்கப்படுகின்றன.

சரக்கு வாகனங்களில் காய்கறி விற்பனை கடை வைப்பவர்கள், சாலையில் இடையூறாக வாகனங்களை நிறுத்தி விற்பனையில் ஈடுபடுகின்றனர். மேலும், சாலையில், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு வைக்கப்பட்டுள்ள இடத்தில், கார் உள்ளிட்ட வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுகின்றன.

இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால், இப்பகுதியில், 'பீக் ஹவரில்' கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதை கவனித்து, நடைபாதை மற்றும் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி