தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டதாக, பதவி பறிகொடுத்த மனோ தங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளது, கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ் சமூகவலைதளத்தில், வெளியிட்டுள்ள அறிக்கை: 2021ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி 9. 5 சதவீதம் என்றிருந்தது; ஒரே ஆண்டில் 2022ல் 16. 4 சதவீதமாகவும், 2023ல் 25 சதவீதமாகவும் உயர்ந்தது.
தன் மீது தவறு எதுவும் இல்லை, தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் தான் மிகச்சிறப்பாக செயல்பட்டேன்' என்று கூறும் வகையில் மனோ தங்கராஜ் அறிக்கை அமைந்துள்ளது. அப்படியெனில், அமைச்சர் என்ன காரணத்தால் நீக்கப்பட்டார் என்பதை ஆளும் கட்சி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.