ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் விரைவில் சென்னை வருகை

57பார்த்தது
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் விரைவில் சென்னை வருகை
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் இந்த மாத இறுதியில் சென்னைக்கு வரவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116. 1 கி. மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த 3 வழித்தடங்களில் பணிகள் முடிந்தபின், 138 ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் 3 பெட்டிகளை கொண்டிருக்கும்.

இதற்கிடையில், ஓட்டுநர் இல்லாத 36 மெட்ரோ ரயில்களை ரூ. 1, 215. 92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் சிட்டியில் கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. தற்போது, இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில்இந்த மாத இறுதியில் சென்னைக்குவரவுள்ளது. இந்த ரயிலை, 4-வது வழித்தடத்தின் ஒருபகுதியான பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை உயர்மட்டபாதை அமைக்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி