மலைக்குன்றை உடைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்க - சீமான்

68பார்த்தது
மலைக்குன்றை உடைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்க - சீமான்
கன்னியாகுமரி மாவட்டம் செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட மக்களின் வாழ்வாதரமாகவும் இயற்கை அரணாகவும் திகழும் மலையை உடைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் செறுகோல் மலைக்குன்றை மலையை உடைக்க முயலும் டிடிகே கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனம் மற்றும் நில உரிமையாளர் சிலருடன் சேர்ந்து, மலையை உடைக்க எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைக் கொன்று விடுவதாக தகாத வார்த்தைகள் கூறி மிரட்டுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இயற்கை வளங்களைக் காக்க போராடும் மக்களை வளக்கொள்ளையர்கள் மிரட்டுவதும், அதை அரசும் காவல்துறையும் வேடிக்கைப் பார்ப்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.

இனியும் மலைகளை உடைத்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தமிழக அரசு அனுமதிக்குமாயின் அது வருங்கால தலைமுறைக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். ஆகவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி, செறுகோல் மக்களின் வாழ்வாதரமாகவும் இயற்கை அரணாகவும் திகழும் மலையை உடைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும். கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி