சென்னை - தூத்துக்குடி விமான சேவை தொடக்கம்

84பார்த்தது
சென்னை - தூத்துக்குடி விமான சேவை தொடக்கம்
சென்னை - தூத்துக்குடி விமான சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக ஞாயிறு மதியம் முதல் விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தில் மழை வெள்ள நீர் வடிந்த நிலையில், விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றது.