சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா - அனுமதிக்கப்படும் நேரம் குறைப்பு

61பார்த்தது
சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா - அனுமதிக்கப்படும் நேரம் குறைப்பு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் உள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இந்தாண்டு ஆடி அமாவசை திருவிழாவிற்கு காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

தொடர்புடைய செய்தி