சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லும் என்றும் தலைமை நீதிபதி அறிவிப்பு. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டுகள் தலைமை நீதிபதி அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்த 8 கவுன்சிலர்களின் வாக்குகளும் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு செலுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.