13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

80பார்த்தது
13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று (ஜூலை 08) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கரூர், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி