தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

55பார்த்தது
தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தென்தமிழகத்தின் மேல் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்ரல் 14) தென் தமிழக மாவட்டங்களில், ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாப்புள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்யக்கூடும். அதேபோல இன்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில், 34 முதல் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி