7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

60பார்த்தது
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜுலை 26) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று காலை 10 மணிக்குள், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரிக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி