தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 09) 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.