பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு

60பார்த்தது
பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 26.06.2024 முதல் 28.06.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 6.00 மணி வரை நடத்தவுள்ளது. தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 8668102600/7010143022. சிட்கோ 600 032.

முன்பதிவு அவசியம், அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி