ஓடும் பேருந்தில் செல்ஃபோன் திருட்டு.. வீடியோ

51பார்த்தது
டெல்லி போக்குவரத்துக் கழகப் பேருந்தில் கடந்த மே 16ஆம் தேதி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பேருந்தின் கதவுக்கு அடுத்த இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணின் போனை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்தார். பாதிக்கப்பட்டவர் சுதாரிப்பதற்குள் திருடன் தப்பியோடிவிட்டார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக பஸ்சில் இருந்து இறங்கி திருடனை தேடினார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி