முழு கர்ப்ப காலம் என்பது 37லிருந்து 42 வாரங்களுக்கு இடையில் நீடிக்கும். 37 வாரங்களுக்கு முன்னதாக குழந்தை பிறக்கும்போது அது குறை பிரசவம் எனப்படுகிறது. ஒரு பெண்ணிற்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற நீண்ட கால உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் கருப்பை அல்லது சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றுகள் குறை பிரசவத்திற்கு காரணமாக அமையலாம். வயது, உளவியல் பிரச்சனையாலும் குறை பிரசவம் ஏற்படும்.