தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட செயலாளராக பாண்டி என்பவரை கட்சி தலைமை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து வரவேற்பு அளித்தனர். இதில் காவல்துறையிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வெடி வெடித்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியதாக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் உட்பட 5 பேர் மீது ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.