புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நேற்று (நவ., 07) நடந்த போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களை கைது செய்ததை எதிர்த்து, கொட்டும் மழையில் சாலையில் படுத்து கிருஷ்ணசாமி தர்ணாவில் ஈடுபட்டார்.