கார் டிரைவரை துப்பாக்கியை காட்டி தாக்குதல்.. (வீடியோ)

9864பார்த்தது
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் வினோத் மிஸ்ரா உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று (மே 27) தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​பின்னால் சென்ற டாக்சி மிஸ்ராவின் கார் மீது மோதியது. நடுரோட்டில் காரை நிறுத்திய மிஸ்ரா, டாக்ஸி ஓட்டுநர் ரஞ்சித் சுக்லாவுடன் சண்டையிட்டார். தொடர்ந்து அவர் தன்னிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து ஓட்டுநரை மிரட்டினார். துப்பாக்கியை திருப்பிப்பிடித்து அந்த ஓட்டுநரை பலமுறை தாக்கினார். இதனை வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக பரவி வருகிறது. துப்பாக்கியை பொது இடத்தில் காட்டி தாக்குதல் நடத்திய வினோத் மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி