அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் விவசாயிகளிடையே புற்றுநோய் அபாயம் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. பொதுவாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளைத் தீர்மானிக்க, பூச்சிக்கொல்லிகளின் விளைவுகளையும் ஆராயபட்டது. பபூச்சிகளைக் குறைக்க இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் 2-4D, அசிபேட், மெட்டோலாக்லர் மற்றும் மெத்தோமைல் ஆகியவையும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.