கெஜ்ரிவாலின் முதல்வர் பதவியை பறிக்க முடியாது - ஐகோர்ட்

81பார்த்தது
கெஜ்ரிவாலின் முதல்வர் பதவியை பறிக்க முடியாது - ஐகோர்ட்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா அமைப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இன்று (ஏப்ரல் 4) இந்த மனு மீதான விசாரணையில், மாநிலத்தை நாங்கள் நிர்வாகிக்கவில்லை, எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தீர்வை அளிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

தொடர்புடைய செய்தி