மோடிக்கு எதிராக பிரச்சாரம்.. விவசாயிகள் முடிவு

73பார்த்தது
மோடிக்கு எதிராக பிரச்சாரம்.. விவசாயிகள் முடிவு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள விவசாய சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய மத்திய மோடி அரசை கண்டித்தும், விவசாயிகள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத மோடிக்கு எதிராகவும் இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி