முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்..

59பார்த்தது
முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. வருகிற 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சர் வெளிநாடு செல்வதால், அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து அமைச்சர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளது. அதே போல், பிப்ரவரி 2வது வாரத்தில் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. தமிழக அரசு நிதிநிலை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யவுள்ள நிலையில் பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி