பைஜூஸ் அதிபர் சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிவு

79பார்த்தது
பைஜூஸ் அதிபர் சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிவு
ஆன்லைன் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமான பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிந்துள்ளது. இதுகுறித்து பிரபல ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓராண்டுக்கு முன் ரூ.17,545 கோடியாக இருந்த பைஜூஸ் ரவீந்திரனின் சொத்து மதிப்பு தற்போது பூஜ்யமாகிவிட்டது. 2022ஆம் ஆண்டில் ரூ.1,83,597 கோடியாக இருந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.8,345 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.