பஸ் ஸ்டிரைக்.. பயணிகளின் உயிருக்கு யார் பொறுப்பு?

118139பார்த்தது
பஸ் ஸ்டிரைக்.. பயணிகளின் உயிருக்கு யார் பொறுப்பு?
தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பேருந்துகள் ஓடாது என்று கூறப்பட்டது. ஆனாலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு கிடங்கில் பேருந்துகள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இப்படி அரசாங்கமே பயணிகளின் உயிர் மீது பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி