பாஜக முன்னாள் பிரமுகரை தாக்கிய பாஜக செயலாளர் கைது!

52பார்த்தது
பாஜக முன்னாள் பிரமுகரை தாக்கிய பாஜக செயலாளர் கைது!
திருவாரூரில் பாஜக விவசாய அணியின் முன்னாள் தலைவர் மதுசூதனன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவத்தில், தலைமறைவாக இருந்த பாஜக மாவட்டச் செயலாளர் செந்தில் அரசனை தேனியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கட்சி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதால் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில் ஏற்கனவே பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கரன், ஜெகதீசன், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.