கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் கழுகு பார்வை வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சுமார் 1,75,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எச்சரிக்கை SMS-கள் அனுப்பப்பட்டு வருகிறது.