மணமகனை பதறவைத்த மணமகள் - வைரல் வீடியோ

23042பார்த்தது
திருமண மேடையில் மணமகனை அதிர்ச்சியில் ஆழ்த்திய மணப்பெண்ணின் ஆவேச பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த முதியவரை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி தகராறு செய்த மணப்பெண்,
திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது திடீரென நாற்காலியில் இருந்து எழுந்தார். தொடர்ந்து கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழற்றி மணமகனின் முகத்தை நோக்கி வீசினார்.

இவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என குடும்பத்தினரிடம் சத்தம் போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாப்பிள்ளைக்கு அரசு வேலை இருக்கிறது என்று உறவினர்கள் மணப்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர், ஆனாலும் அவர் கேட்கவில்லை. இந்த முழு வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் வித்தியாசமாக பதிலளித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you