Breaking: “பாஜகவுடன் கூட்டணி தொடரும்” சந்திரபாபு நாயுடு அதிரடி

15543பார்த்தது
Breaking: “பாஜகவுடன் கூட்டணி தொடரும்” சந்திரபாபு நாயுடு அதிரடி
‘இண்டியா’ கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு புதிய ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பாஜக கூட்டணியில் தொடர இருப்பதாக அவர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது செய்தியாளர்களை சந்தித்து வரும் அவர், “பல நெருக்கடிகளில் இருந்து மக்கள் என்னை காப்பாற்றி இருக்கின்றனர். அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி