தந்தையின் வழியில் மக்கள் பணி! விஜய் வசந்த் உருக்கம்

67பார்த்தது
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1 லட்சத்து 79 ஆயிரத்து 907 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். வெற்றிக்கு பின்னர் வெளியிட்ட வீடியோவில், “உங்களுக்கு சேவை செய்ய மற்றுமொரு வாய்ப்பு தந்த குமரி மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தந்தையின் வழியில் மக்கள் பணியினை மேற்கொண்டு வரும் நான் இனியும் குமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் உங்கள் தேவைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என உறுதி அளிக்கிறேன். இது எனது வெற்றி அல்ல. உங்கள் வெற்றி.” என்றார்.

தொடர்புடைய செய்தி