750 குளங்களில் உடைப்பு - தலைமை செயலர்

85பார்த்தது
750 குளங்களில் உடைப்பு - தலைமை செயலர்
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் மாற்று வழியில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெள்ள பாதிப்பை பார்வையிட்டு வரும் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளர். மேலும் நெல்லை, தூத்துக்குடியில் மொத்தம் 750 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 328 குளங்கள் தற்போது உடைந்த நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார். மேலும் 2 மாவட்டங்களில் 175 இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன எனவும், போக்குவரத்து சரிசெய்ய முடியாத இடங்களில் மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது என கூறியுள்ளார். வெள்ள பாதிப்பு கணக்கெடுப்பு பணி முடிந்த உடன் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.