இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது என இந்திய கிரக்கெட் வீரர் நடராஜன் பேட்டியளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், “கிரிக்கெட்டில் அரசியல் எதுவும் நடைபெறவில்லை. வீரர்களிடம் எந்தவொரு ஏற்ற தாழ்வுகளையும் பிசிசிஐ பார்ப்பதில்லை. பிசிசிஐ-ன் ஒத்துழைப்பால் தான் நான் இந்திய கிரிக்கெட் வீரராக உருவாகி உள்ளேன்” என்று கூறியுள்ளார்.