பாஜகவுடன் பாமக கூட்டணி? டெல்லி செல்லும் அன்புமணி

53401பார்த்தது
பாஜகவுடன் பாமக கூட்டணி? டெல்லி செல்லும் அன்புமணி
மக்களவை கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று இரவு விமானம் மூலம் சென்னையில் இருந்து அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்ல உள்ளதாக தேகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தரப்பில் ராமதாஸுடன் சி.வி.சண்முகம் இரண்டு முறை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் பாமக கேட்கும் தொகுதிகளை அதிமுக தர மறுப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி இழுபறி நீடித்து வருவதால் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாமக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி