முதல்வரின் கார்களுக்கு கருப்பு சென்டிமெண்ட்.. இதுதான் காரணமா..?

574பார்த்தது
முதல்வரின் கார்களுக்கு கருப்பு சென்டிமெண்ட்.. இதுதான் காரணமா..?
முதல்வர் பாதுகாப்பு வாகனங்கள் புதிய கருப்பு நிற வாகனங்களாக இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளை நிற கார்கள் முதல்வரின் பாதுகாப்புக்காக முன்னும், பின்னும் அணிவகுத்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது கருப்பு நிற கார்களாக இவை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 2024 கூட்டுத்தொகையில் 8 என வருகிறது. இது ஜோதிட சாஸ்திரப்படி 8 எண் சனி பகவானுக்குரியதாகும். சனிக்கு உரிய நிறமும் கருப்பு ஆகும். முதல்வர் மத நம்பிக்கைகளில் ஈடுபாடு இல்லாதவர் என்ற போதிலும், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மிகுந்த பக்தி கொண்டவர். இதன் காரணமாக கூட கார்களின் நிறம் மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி