அதிக பணிச்சுமை காரணமாக உத்தரப்பிரதேசம் லக்னோவில் தனியார் வங்கி பெண் ஊழியர் உயிரிழந்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், “பாஜகவின் தோல்வியடைந்த பொருளாதார கொள்கைகளால் நிறுவனங்கள் தங்கள் தொழிலை காப்பாற்றிக்கொள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கின்றன. இதுபோன்ற திடீர் மரணங்களுக்கு பாஜக அரசுதான் பொறுப்பு. இந்த மரணங்களை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை” என கூறியுள்ளார்.