பாஜக எம்.பி., பரபரப்பு கருத்து

63பார்த்தது
பாஜக எம்.பி., பரபரப்பு கருத்து
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.,யுமான அனந்த் குமார் ஹெக்டே பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி., தொகுதிகளை பாஜ கைப்பற்றும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றார். அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள மதச்சார்பின்மை நீக்கப்படும் என்றார். மேலும், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று அனந்த்குமார் ஹெக்டே கூறினார்.

தொடர்புடைய செய்தி