போதை பொருள் விற்பனை செய்த பாஜகவினர் கைது

54பார்த்தது
போதை பொருள் விற்பனை செய்த பாஜகவினர் கைது
சென்னை கொருக்குப்பேட்டை நைனியப்பன் தெருவில் உள்ள மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா, ஹான்ஸ், போதை பாக்கு பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக நுண்ணறிவு பிரிவு போலீசார், கொருக்குப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் கொருக்குப்பேட்டை கேசவ கிராமணி தெருவை சேர்ந்த பச்சையம்மாள் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் கொடுத்த தகவலின்பேரில், கொருக்குப்பேட்டை கேசவ கிராமணி தெருவை சேர்ந்த ராயபுரம் பாஜக கிழக்கு மண்டல பொருளாளர் ராஜேந்திரன், லோகேஷ் (29), நரேந்தர் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.