தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டு, மாநிலத் தலைவர் பதவிக்கு புதியதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அல்லது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தர்மபுரி முன்னாள் எம்.பி. செந்தில்குமாரின் எக்ஸ் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. "மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைய, தமிழ்நாடு பாஜகவிற்கு புதிய மாநில தலைவர் நியமிக்கப்பட உள்ளார்" என பதிவிட்டுள்ளார்.