சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு அளிக்கப்பட்டிருந்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையையும் அவர் குற்றவாளி என்பதையும் உச்ச நீதிமன்றம் நிறுத்து வைத்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து பொன்முடி மேல் முறையீடு செய்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதன் மூலம் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி. தனது எம்.எல்.ஏ பதவியை மீட்க தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தை பொன்முடி அணுகலாம். நீதிமன்றத்தை நாடியும் எம்.எல்.ஏ. பதவியை பொன்முடி மீட்கலாம் என பேரவை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.