பாரத் அரிசி விற்பனை வாகனம்: பொதுமக்கள் வரவேற்பு!

56385பார்த்தது
பாரத் அரிசி விற்பனை வாகனம்: பொதுமக்கள் வரவேற்பு!
தூத்துக்குடியில் மானிய விலை பாரத் அரிசி விற்பனை வாகனத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். 
அரிசி, பருப்பு, கோதுமை மாவு உள்ளிட்டவற்றின் வெளி சந்தை விலை உயர்வினை கருத்தில் கொண்டு நாபர்டு மூலம் எளிய மக்கள் பயன் பெறும் வகையில், மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கும், கடலை பருப்பு 1 கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தூத்துக்குடி நகரில் விற்பனை செய்ய வந்த வாகனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மானிய விலை அரிசி, கோதுமை, கடலை பருப்பு போன்ற பொருட்களை பெற்று கொண்ட பொதுமக்கள் அரசின் சேவையை வாழ்த்தினர்.
Job Suitcase

Jobs near you