தாடி சரியாக வளரவில்லையா? காரணம் இதுதான்

62பார்த்தது
தாடி சரியாக வளரவில்லையா? காரணம் இதுதான்
சில ஆண்களுக்கு தாடி வளர்வதில் அதிக தாமதம் ஏற்படுகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு கூட இதற்கு காரணமாக இருக்கலாம். சருமம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு தாடி வளர்ச்சியும் ஊக்குவிக்க முடியும். தரமான மாய்சுரைசர் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை பொலிவாகவும் சுத்தமாகவும் வைக்கலாம்.

உடற்பயிற்சி உடலை கட்டுக்குள் வைக்க உதவுவது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியை தூண்டும். டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பையும் தூண்டுகிறது. இது ஆரோக்கியமான செல்களை உற்பத்தி செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும்.

தொடர்புடைய செய்தி