பீன்ஸ் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

65பார்த்தது
பீன்ஸ் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
நீலகிரி மாவட்டத்தில் புஷ் பீன்ஸ், கொடி பீன்ஸ், வாட்டக்ஸ், பென்னி பீன், கறி பீன்ஸ், சாட்டை மற்றும் போல் பீன்ஸ் போன்ற பீன்ஸ் வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பீன்ஸ் வகைகளுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும். சில சமயங்களில் விலை வீழ்ச்சி ஏற்படும். கடந்த சில மாதங்களாக பீன்ஸ் விலை சற்று குறைந்து இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பென்னி மற்றும் புஷ் பீன்ஸ் போன்றவைகளுக்கு அதிக விலை கிடைத்து வருகிறது. தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரையில் கிடைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி